கப்தில் சாதனையை முறியடிப்பாரா ரோஹித்.., இன்றைய ஆட்டத்தில் நடக்க போகும் சரித்திரம் என்ன??

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ரோஹித் சர்மா சாதனை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டிக்கு இரு அணிகளுமே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் இன்று நடைபெறும் ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் பல சாதனை புரிய வாய்ப்புள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன்படி பார்க்கையில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா சாதனை புரிய அதிக வாய்ப்புள்ளது என தெரிகிறது. அதாவது T20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில்(172) தற்போது முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் ரோஹித் சர்மா(172) 2 வது இடத்தில் உள்ளார்.

IND VS AUS 1st T20..,3 ஆண்டுக்கு பின் வீர்கள் களமிறங்கும் மைதானம்! வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமா?

அதே போன்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல்(124) 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் அதிக சிக்ஸர் அடித்தால் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சாதனை புரிவாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here