ஒரு நாள் தான் லீவு உனக்கு.., ரெண்டு பொண்டாட்டி காரனுக்கு வந்த சோதனை.., மத்திய பிரதேசத்தில் நடந்த நகைச்சுவை சம்பவம்!!

0
ஒரு நாள் தான் லீவு உனக்கு.., ரெண்டு பொண்டாட்டி காரனுக்கு வந்த சோதனை.., மத்திய பிரதேசத்தில் நடந்த நகைச்சுவை சம்பவம்!!
ஒரு நாள் தான் லீவு உனக்கு.., ரெண்டு பொண்டாட்டி காரனுக்கு வந்த சோதனை.., மத்திய பிரதேசத்தில் நடந்த நகைச்சுவை சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில் இரண்டு மனைவிகளுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் பொறியாளர் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நூதன சம்பவம்

தற்போதைய கால கட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பழமொழியை அழித்து ஒருவருக்கு இருவர் என மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதாவது மனைவிக்கு தெரியாமல் சின்ன வீடு வைத்துக் கொள்கிறார்கள். இது போல் ரெண்டு பொண்டாட்டி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது பொறியாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இரண்டு வருடம் தனது குழந்தை மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் பொறியாளர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தட்டுப்பாடு நிலவிய சூழ்நிலையில் சீமா, குழந்தையை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அரசாங்கம் ஊரடங்கு போட்டதால் ஊருக்கு திரும்ப முடியாமல் சீமா தனது சொந்த ஊரிலே தங்கியுள்ளார். இதனால் பொறியாளர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் பொறியாளருக்கும் அவரது ஆபீஸில் பணிபுரியும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்து கல்யாணத்தில் போய் முடிகிறது. இந்த தம்பதியருக்கும் பெண் குழந்தை உள்ளது. நீண்ட காலமாக சீமாவுக்கு மறைமுகமாக வைத்திருந்த இந்த விஷயம் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் 2023., வெற்றி வாய்ப்பை தவறவிட்ட PV.சிந்து., கடைசில இப்படி ஆயிடுச்சே!!

இதனால் ஆத்திரமடைந்த சீமா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதன்பின் சீமா உறவினர் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரது மனதை மாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து சீமா உறவினர்கள் பொறியாளரின் இரண்டாவது மனைவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரண்டு பேரும் பொறியாளரை விட்டுக் கொடுக்காததால் உறவினர்கள் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர். அதாவது ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவியுடன், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் இருக்க வேண்டும். மீதம் இருக்கும் ஒரு நாளில் பொறியாளர் விருப்பப்பட்ட வீட்டிற்கு செல்லலாம் என்று உறவினர்கள் முடிவெடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here