Wednesday, April 24, 2024

நாடோடி வாழ்கைப் போராட்டம் – வெற்றிக் கண்ட குடுகுப்பை சமூக மாணவி..!!

Must Read

மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சமூகத்தைச் சேர்ந்த பெண், 12ஆம் வகுப்பு தேர்வில் 500/600 மதிப்பெண்கள் வாங்கியது மட்டுமில்லாமல் அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலையில்லா வாழ்வு:

மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பல இடங்களுக்குப் பயணம் செய்து தொழிலைத் தொடருவது என்பது இவர்களது வழக்கம்.

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது!!

kudukupai community
kudukupai community

குறி சொல்லும் தன் பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த தெய்வானை, திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது திகைப்பூட்டுகிறது.

தெய்வானையின் கனவு:

அச்சமூகத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை தொடருவது அரிது. இதனால் இவர் அச்சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாக இருப்பார் என்றுக் கருதப்படுகிறது. பி.காம் படித்து, வங்கியில் வேலைக்கு சேர்ந்து, அவர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே தெய்வானையின் கனவு. அவர்கள் தற்காலிக குடில் அமைத்து வசிப்பதால், அங்கு மின்சார வசதி கிடையாது. ஆனாலும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு, பெற்றோருடன் பல இடங்களுக்குச் சென்றாலும், படிப்பில் ஆர்வமாக இருந்து வெற்றியை கண்டுள்ளார் தெய்வானை.

சட்டமன்ற உறுப்பினரின் கருணை குணம்:

தெய்வானை போன்ற பெண் குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவரின் கல்லூரி படிப்பு செலவை செலுத்துவதாகவும், மேலும் பலர் உதவி செய்ய, அந்த மாணவியின் பெயரில் வங்கிக் கணக்கை தொடங்கி வைக்க உள்ளதாகவும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -