Thursday, April 25, 2024

கேமரா வடிவில் வீடுகட்டிய அதிசய கலைஞர் – கேனான், நிகான் என்று மகன்களுக்கு பெயர்..!!

Must Read

தனது மகன்களுக்கு கேனான், நிகான் மற்றும் எப்சன் எனப் பெயர்கள் வைத்ததை அடுத்து, 49 வயது பெலகாவியை சேர்த்த புகைப்படக்காரர் ரவி ஹாங்கால் அவர் வீட்டை புகைப்படக் கருவியின் வடிவத்தில் கட்டியுள்ளார் ஒரு அதிசய புகைப்படக்கலைஞர்.

அதிசய புகைப்படக்கலைஞர்:

தனது சகோதரர் பிரகாஷைப் பார்த்தப் பின்பு தான் ரவிக்குப் புகைப்படடக் கலையின் மீது ஆர்வம் வந்துள்ளது. 80- களில் SSLC முடித்த உடனே, ரவி புகைப்படக்கலையைத் தனது தொழிலாக எடுக்க முடிவெடுத்துள்ளார். ரவி செய்தியாளருக்கு கூறியதாவது, “நான் வெளிப்புற ஷூட்டுகளில் இருந்து தொடங்கினேன். என்னிடம் சென்னிட் புகைப்படக் கருவி இருந்தது, பின்பு நான் பெண்டாக்ஸ் வாங்கினேன். நான் திருமணங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு முதலில் படங்கள் எடுத்தேன்.

மகன்களுக்கு விசித்திர பெயர்கள்:

மூத்தமகனின் பெயரைக் குடும்பம் ஏற்றுக் கொண்டதினால், அந்த தம்பதி 18 வயதான தனது இரண்டாம் மகனுக்கு நிகான் என்றும், 13 வயதான மூன்றாவது மகனுக்கு எப்சன், (பிரபல அச்சு கருவி) என்றும் பெயர் வைத்துள்ளனர்.

Karnataka photographer built camera-shaped house 'click'
Karnataka photographer built camera-shaped house ‘click’

“எப்பொழுதும் மக்கள் இந்த தனித்தன்மைக் கொண்டப் பெயர்களை பற்றி என்னிடம் கேட்பார்கள். அதற்கான காரணத்தை நான் எப்பொழுது கூறினாலும், அவர்கள் அதிசிய படுவார்கள்” என அவர் கூறினார்.

வீடு கட்டும் கனவு:

சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி வீடுக் கட்ட முடிவெடுத்தபோது, தனது மனைவியிடம் வீடு பார்க்க புகைப்படக் கருவி வடிவில் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் தனது மைத்துனன் மற்றும் பெங்களுருவில் உள்ள கீ கான்செப்ட்ஸ் இன்டிரியர்ஸ் ஏற்படும் கட்டுமான நிறுவனத்தின் CEO ஆன யல்லானி R ஜாதவை அணுகினார். ஜாதவ் TNM – இடம், ரவியின் கருத்து சவாலானது என்று கூறியுள்ளார். எனினும், ரவி இதனை விட்டுக் கொடுக்க மாட்டார் என அறிந்து, ஜாதவ் மற்றும் அவரது குழு, ரவியின் கருத்தைக் கொண்டுப், புகைப்படக் கருவியின் வெவ்வேறு பாகங்களை அந்த வீட்டில் ஒருங்கிணைத்துள்ளார்.

வீட்டின் வடிவம்:

பால்கனியில் இருப்பது ரீல் வடிவம் எனவும். அவ்வாறு ரீல் ஆக தெரிவது அவர்கள் படுக்கை அறையின் ஜன்னல்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஜன்னலின் கம்பிகளும் வெவ்வேறு புகைப்பட நிறுவனங்களின் குறியீட்டை கொண்டது. இதில், மெமரி கார்டு, பிலிம் ரோல், என அனைத்தும் அடங்கும். மேலும் வீட்டின் உள் கட்டமைப்பும் புகைப்பட கருவியின் சாயல் கொண்டது.

Photographer couple live in camera-shaped house named 'Click'
Photographer couple live in camera-shaped house named ‘Click’

வெளியில் இருந்துப் பார்த்தால், பெரியப் புகைப்படக் கருவி லென்ஸைப் பார்க்க இயலும். அது சமயலறையில் மேற்புறத்தில் உள்ள வட்ட வடிவ ஜன்னல். வீட்டின் மூன்று தளங்கள் ரவியின் மகன்களைக் குறிக்கிறது. முதல் தளம் எப்சன் அச்சு இயந்திரத்தின் பாகங்களையும், ஒன்று நிகான் புகைப் படக் கருவியின் உடலையும் மற்றும் ஒன்று கேனான் புகைப்படக்கருவியின் மின் வெட்டொலியையும் கொண்டுள்ளது.

passion for a photographer ravi
passion for a photographer ravi
ரவி கூறியிருப்பது:

ரவி கூறியதாவது என்னுடைய வீட்டின் அமைப்பு பார்ப்பவர்களை ஈர்க்கும் என்று அறிவேன் ஆனால் வைரல் ஆகும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. “அக்சய த்ரிதியை அன்று பிரம்மண்டமாக இந்த வீட்டை திறக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் கொரோன நோய் தொற்று காரணமாக எங்களால் அதனை செய்ய முடியவில்லை. அருகில் இருந்த நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து விழாவை முடித்தோம். ஆனால் இந்த வீடு அனைவர்க்கும் பிடித்தது. அனைவரும் நின்று செல்பி எடுத்து கொள்கிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவும் என ஒரு போதும் நினைக்கவில்லை. உங்கள் கனவை மனதார பின்தொடர்த்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். என் கனவை அடைய இரண்டரை வருடங்கள் ஆனது.” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -