பொதுவாக சில விலங்குகள் காட்டுக்குள் சுதந்திரமாக சுற்றி திரிவதும் அதற்கான உணவை அதுவே தேடி கொள்வதும் இயல்பான விஷயம். ஆனால் சில வெளிநாடுகளில் வாழும் மக்கள் சிங்கம், புலி, போன்ற காட்டு விலங்குகளை தங்களின் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் அவ்வப்போது அந்த வீடியோக்களை இணையத்தில் ஷேர் செய்து பார்ப்பவர்களை வாயடைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் நௌமான் ஹசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் சங்கிலியால் கட்டப்பட்ட புலியுடன் வீட்டுக்குள் சிறுவன் வாக்கிங் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆபத்தான விலங்குடன் சிறுவன் நெருக்கமாக பழகுவதை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
View this post on Instagram