தமிழக தேர்வர்கள் கவனத்திற்கு., இந்த போட்டி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை! வெளியான அறிக்கை!!

0
தமிழக தேர்வர்கள் கவனத்திற்கு., இந்த போட்டி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை! வெளியான அறிக்கை!!
தமிழக தேர்வர்கள் கவனத்திற்கு., இந்த போட்டி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை! வெளியான அறிக்கை!!

அரசு போட்டித் தேர்வும், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒரே தேதிகளில் வருவதால் மாணவர்கள் போட்டி தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது என பா.ம.கா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பருவத்தேர்வு:

இந்திய வானிலை மையத்தில் 990 காலிப்பணியிடங்களுக்கான போட்டி தேர்வு டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு B.Sc Physics படித்தவர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த தேர்வு வரும் டிசம்பர் 10 முதல் 20 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அதே நேரத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்.சி.இயற்பியல் படிப்பவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெறுகிறது. இதனால் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் பா.ம.கா. தலைவர் அன்புமணி ராமதாஸ், “எம்.எஸ்.சி. படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம்.

ஜன.2023 குடியரசு தின அணிவகுப்பில் நடக்கும் புதுமை., பெண்களுக்கு கிடைக்கப் போகும் கௌரவம்!!

இதனால் பருவத்தேர்வு நேரத்தில் போட்டி தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போகக்கூடும். மேலும் 2017ல் வானிலை மைய தேர்வில் தமிழகத்திலிருந்து ஒரே ஒரு மாணவன் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் தமிழக அரசு பல்கலைக்கழக தேர்வை ஒத்தி வைத்து அதிக அளவில் மாணவர்கள் போட்டி தேர்வில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.” என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here