கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் இவ்வளவா ??? நெஞ்சை பதறவைக்கும் எண்ணிக்கை

0

கொரோனா வின் தாக்கம் அதிகமாக இருந்ததன் விளைவாக இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. இதனால் குழந்தைகள் பல தங்கள் பெற்றோர்களை இழந்து தவிக்கின்றனர். இதுவரை 9,346 குழந்தைகளை கொரோனாவினால் பெற்றோரை இழந்ததாக தகவல் வந்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்:

தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளது.இதனால் மக்கள் பெரும் துயரடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அரசு மக்களுக்கு எடுத்துக்கூறி வந்தது. ஆனால் மக்களிடையே சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இருப்பினும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துகொண்டே தான் இருந்தது.

மேலும் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுவதால் ,கொரோனாவால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.இதனால் பலர் நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் குழந்தைகள் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை 9,346 குழந்தைகளை கொரோனாவினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here