தமிழகத்தில் SC & ST வழங்கப்படும் நிதி 90% குறைப்பு…, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!!

0
தமிழகத்தில் SC & ST வழங்கப்படும் நிதி 90% குறைப்பு..., மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!!
தமிழகத்தில் SC & ST வழங்கப்படும் நிதி 90% குறைப்பு..., மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!!

மத்திய அரசானது, ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) நலனுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட நிதி தொகையை ஒதுக்கி வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு நடப்பு வருடம் வழங்கப்படும் நிதியானது 90 சதவீதம் குறைந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி ரூ. 1,553 கோடியாகவும், 2019-2020 ஆம் ஆண்டில் 385.51 கோடியும், 2020-21ம் ஆண்டு ரூ.541.29 கோடியும், 2021-22ம் ஆண்டு ரூ.379.59 கோடியும் என படிப்படியாக மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதியானது ரூ. 159.78 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, ரூ. 1,553 கோடியில் இருந்து ரூ. 159.78 கோடியாக குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ள நிலையில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதி 90% குறைந்திருப்பது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தமிழக முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் குறைக்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கும் நிதியை ஆண்டுதோறும் ரூ. 1500 கோடிக்கு மேல் வழங்குமாறும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here