இந்தியாவில் 90 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

0
இந்தியாவில் 90 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!
இந்தியாவில் 90 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.., அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

இந்தியாவில் உள்ள வேலையின்மையை போக்க மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

வேலை வாய்ப்புகள்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று ஆட்டி படைத்து வந்த நிலையில் இப்போது தான் பல்வேறு நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்நேரத்தில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் ரயில்வே துறை, மின்னணு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அமைச்சராக விளங்கும் அஸ்வினி வைஷ்ணவ் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இந்தியாவில் மின்னணு சாதன உற்பத்தி, ஐடி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க தொழில்கள் மூலம் 88 முதல் 90 லட்ச இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கணியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு., டிசம்பர் 5 முதல் நேரடி வகுப்புகள்! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

மேலும் இனி வரும் இரண்டு ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி துறையிலும், ஐடி தொழில் துறையிலும் வளர்ச்சிகளை மேம்படுத்தி ஒரு கோடிக்கு மேல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here