9,10 மற்றும் 11 வகுப்பு ஆல் பாஸ் ரத்தா?? ஐகோர்ட் அதிரடி!!

0

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கி எந்த அளவிற்கு வேகமெடுத்ததோ தற்போது அதே அளவிற்கு கொரோனா பரவல் இந்த ஆண்டும் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போது சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. தற்போது இந்த வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நந்தகுமார் என்பவர் பொதுத்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் கூறியதாவது, இந்த வழக்கை அரசு கலந்தாலோசிக்கலாமல் அரசு எடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

school students

கொரோனா பரவல் எதிரொலி – மற்ற மாவட்ட மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைப்பு!!

தற்போது அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு அறிவித்த ஆல் பாஸ் அறிவிப்பிற்கு தடை செய்யக்கூறி சமர்ப்பித்த மனுவிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை தற்போது முடித்தும் வைத்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 11ம் வகுப்பு மாணவர்களின் தகுதி மற்றும் கல்வித்திறனை கண்டறிவதற்கு அந்த அந்த பள்ளிகள் அனைத்தும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்வுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here