தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி 7ஆம் தேதி இரவு தேர்பவனி, 8ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழாவிற்கான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த நாளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கொண்டாடப்பட உள்ளது.