83 படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டிய சச்சின் – நன்றி கூறி நெகிழ்ச்சி!!

0

இந்திய அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை நினைவு படுத்தும் விதமாக, எடுக்கப்பட்டுள்ள 83 படத்தின் குழுவினரை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சச்சின் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மனம் திறந்து பாராட்டு :

இந்தியாவில் கிரிக்கெட் போட்டி ஒரு பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம், 1983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தான். கபில்தேவ் தலைமையில், இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதை எடுத்து, 28 ஆண்டுகளுக்கு பின்னர் 2011ல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்றை மாற்றியமைத்தது.

இந்த சம்பவத்தில்,  கபில்தேவ் தலைமையிலான முதல் கோப்பை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில், 83 என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் ஆக ரன்வீர் சிங்கும், தமிழக வீரர் ஸ்ரீகாந்த்தாக ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தை பார்த்த சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பை வெற்றியின் சின்ன சின்ன தருணங்களை இந்த திரைப்படம் நினைவு கூற வைத்துள்ளது என்றும், இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ள ரன்வீர் சிங் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here