அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் இந்த சலுகையும் இருக்கு?? முக்கிய தகவல் வெளியீடு!!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் இந்த சலுகையும் இருக்கு?? முக்கிய தகவல் வெளியீடு!!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் இந்த சலுகையும் இருக்கு?? முக்கிய தகவல் வெளியீடு!!

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படியை குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் உயர்த்தி வருகிறது. இதன்படி, மத்திய அரசானது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை கடந்த மார்ச் மாதம் உயர்த்தியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், அசாம், உள்ளிட்ட மாநில அரசுகளும், அகவிலைப்படியை கடந்த சில மாதங்களில் உயர்த்தியது. இதையடுத்து, தமிழக அரசும் 38 %-லிருந்து 42%-மாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தது.

விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., விவரம் உள்ளே!!

இந்நிலையில், மத்திய அரசானது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் சேர்த்து ஃபிட்மெண்ட் காரணியையும் 2.57%-திலிருந்து 3.68 %-மாக உயர்த்தி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here