முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதிகரித்த மருத்துவர்களின் உயிரிழப்பு…!  இறப்பு எண்ணிக்கையை வெளியிட்ட இந்திய மருத்துவ சங்கம்!!!

0

இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஆட்கொண்டு பல உயிர்களை பழிவாங்கி உள்ளது. இத்தகைய சூழலில் நமக்கு வாழும் கடவுள்களாக இருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களையும் விட்டு வைக்காத இந்த கொரோனா இதுவரை நாடு முழுவதும் 776 மருத்துவர்களின் உயிரை பழிவாங்கி உள்ளது. மேலும் இந்த உயிர் இழப்பானது முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதிகம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது.

கொரோனா எனும் வைரஸ் தொற்று  முதல் மற்றும் இரண்டாம் என தனது பரவலை நீட்டிக் கொண்டு போகிறது. இதையடுத்து நாடு எங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் முடங்கி உள்ள நிலையில் , மருத்துவர்கள் எனப்படும் நிகழுலக கடவுள்கள் தங்களின் உயிரை  சிறிதும் பொருட்படுத்தாது கொரோனா பாதித்த நோயாளிகளின் உயிரை காக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மருத்துவர்களின் உதவியால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் விலைமதிக்க முடியாத உயிரை திரும்ப பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் , நாடு முழுவதும் கொரோனாவால் 776 மருத்துவர்கள் தங்களின் உயிரை பறி கொடுத்து உள்ளனர். இதில் 30 வயது முதல் 55 வயதுக்கு உட்பட மருத்துவர்களே அதிகம். நாட்டிலேயே அதிகமாக பீகாரில் 115 பேரும், டெல்லியில் 109 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 79 பேரும், தமிழகத்தில் 50 பேரும் உயிரிழந்து உள்ளனர். மேலும் முதல் அலையை காட்டிலும் இந்த அலையில் 28 மருத்துவர்கள் அதிகமாக உயிர் இழந்து உள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது . அதாவது கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here