ரூ.1.83 கோடி செலவில் 75 வது சுதந்திர தின நினைவு தூண் – தமிழக அரசு அறிவிப்பு!!!

0
ரூ.1.83 கோடி செலவில் 75 வது சுதந்திர தின நினைவு தூண் - தமிழக அரசு அறிவிப்பு!!!
ரூ.1.83 கோடி செலவில் 75 வது சுதந்திர தின நினைவு தூண் - தமிழக அரசு அறிவிப்பு!!!

75வது சுதந்திரத்தை முன்னிட்டு ரூ.1.83 கோடி செலவில் சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதற்கான டெண்டர் மற்றும் தூண் அமைக்கும் இடம் போன்றவற்றை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

75வது சுதந்திர தின நினைவு தூண்..

ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா கைப்பற்றப்பட்டு சுதந்திரம் அடைந்தது. இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 75வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தின நினைவுத்தூண் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தூணை ரூ.1.83 கோடி செலவில் காம்பிராமகா நிறுவவுள்ளது என்றும் இதற்கான இடத்தையும் தேர்வு செய்து வருகின்றனர்.

75வது சுதந்திர தின நினைவு தூண்..
75வது சுதந்திர தின நினைவு தூண்..

அதுமட்டுமில்லாமல் இந்த தூணை ஒரு மத காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும் இதற்கான டெண்டரை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த டெண்டர் குறுகிய கால டெண்டர் என்ற அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல் நிறுவனங்கள் இந்த தூணை அமைத்து தர டெண்டர் விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளது. தமிழக அரசு எந்த நிறுவனம் நினைவு சுதந்திர தின நினைவு தூணை அமைக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்பது நாளை தேர்வு செய்யவுள்ளது. அதன் பின் ஒப்பந்த நிறுவனம் பணிகளை தொடங்கவுள்ளது. இதற்கான நிதியை பராமரிப்பு நிதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் அரசு கொடுத்துள்ளது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 26ம் தேதி இந்த டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த தூணை சென்னை காமராஜர் சாலையில் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னம் அருகே இந்த நினைவுத்தூண் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

75வது சுதந்திர தின நினைவு தூண்..
75வது சுதந்திர தின நினைவு தூண்..

ஆனால் அந்த இடம் ராணுவ கட்டுப்பாட்டிற்கு சொந்தமானது அனுமதியும் இல்லை என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்யவில்லை, எனவே அதற்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் விவேகானந்தர் இல்லம் அருகேயும், போர் நினைவு சின்னத்தில் இருந்து 500 அடி இடைவெளியில் உள்ள ஒரு இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த 2 இடங்களில் எதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here