75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அடுத்த மாதம் முதல் பயன்படுத்த தடை – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் 75 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தடை விதிப்பு:

தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  இதில் சபை சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளும்,  துறை சார்ந்த அமைச்சர்களின் பதில்களும் நாளும் இடம்பெற்று வருகிறது.

இதில் இன்றைக்கு பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது.  இதற்கு பதில் தர சுற்றுசூழல் துறை  அமைச்சர் மெய்யநாதன் எழுந்து பேசினார். அவர் தெரிவித்ததாவது, கடந்த ஆட்சியில் அதாவது அதிமுக ஆட்சியில் ஜனவரி 1ம் தேதி 2019ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படவில்லை.

 

அதாவது, இது வெறும் பெயரளவிலான அறிவிப்பாக மட்டுமே இருந்தது.  இதனால், சுற்றுசூழல் சார்ந்த தேவையற்ற வீண் பிரச்சனைகள் வந்தன.  நமது மண் வளமும் மிகவும் பாழடைந்து போனது. இதனை  மீட்டெடுக்கும் விதமாக நமது அரசின் சார்பாக, 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் அனைத்தும் வருகின்ற 30.09.2021 முதல் பயன்படுத்த முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது.

மேலும், இது தவிர 120 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு 31.12.22 முதலுல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here