7200 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பெண்ணின் டிஎன்ஏ!

0

ஆராய்ச்சியாளர்கள், நமக்கு பல ஆச்சரியமான விஷயங்களை கொடுத்து இருப்பார்கள். ஆனால், இன்று ஆராச்சியாளர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு இன்டர்ஸ்டிங் ஆன நியூஸ் ஒன்று வந்துள்ளது. ஒரு மனிதர் இறந்து விட்டார்கள் என்றால் சில வருடத்தில் அந்த நபருடைய டிஎன்ஏ சாம்பிள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதிகபட்சமாக அந்த டிஎன்ஏ சாம்பிள் 150 வருடங்களுக்கு இருக்கும் என்று கூறப்படும். ஆனால் தற்போது ஆராச்சியாளர்களே அசந்து போகும் அளவிற்கு அவர்களுக்கு 7200 வருடங்கள் முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் டிஎன்ஏ சாம்பிள் கிடைத்துள்ளதாம்.

அந்த பெண்ணிற்கு மரணம் அடைந்த போது 17 வயது தானாம். அதே போல் அவர் மரணம் அடையும் போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். தென்கிழக்கு இந்தோனேசியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு குகை அருகே தான் இந்த பெண்ணின் டிஎன்ஏ சாம்பிள் கிடைத்துள்ளது. டிஎன்ஏ என்பது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே அப்படியே இருக்கும். பின்னர், பருவநிலை மாதம் காரணமாக அழிந்து போய் விடும். ஆனால் 7200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த டிஎன்ஏ சாம்பிள் கிடைத்துள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. இந்த பெண்ணிற்கு ஆராய்ச்சியாளர்கள் பெஸ்கி என்று பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறும் போது, ‘நாங்கள் எவ்வளவோ விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால், இது ரொம்பவே வித்தியாசமான ஆய்வாக பார்க்கப்படுகிறது. நமது முன்னோர்களின் பல விதமான டிஎன்ஏ சாம்பிள்க்களை கலெக்ட் செய்து இருக்கிறோம். ஆனால், இது போன்ற நிகழ்வினை எங்களையே நம்ப முடியவில்லை. இது தொல்பொருள் ஆய்வில் மிகவும் முக்கியமான திருப்பம் ஆகும்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here