7000 மாங்கனிகளுடன் அருபாலித்த அம்மன் – மாம்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி சிறப்பித்த கோவில் நிர்வாகம்!!

0
7000 மாங்கனிகளுடன் அருபாலித்த அம்மன் - மாம்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி சிறப்பித்த கோவில் நிர்வாகம்!!
7000 மாங்கனிகளுடன் அருபாலித்த அம்மன் - மாம்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி சிறப்பித்த கோவில் நிர்வாகம்!!

நேற்று(மே 14) இந்தியாவில் அட்சய திரிதியை  கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள விட்டலர் ருக்மணி கோவிலில் உள்ள அம்மனை 7000 மாம்பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

விட்டலர் ருக்மணி:

மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் பகுதியில் இருப்பது தான் விட்டலர் ருக்மணி கோவில். இந்த கோவில் கிபி 13ம் நூற்றாண்டின் நடுவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலை மராட்டியம், கர்நாடகா, தெற்கு தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த மக்கள் புனித தலமாக கருதுகின்றனர்.இந்நிலையில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக நாடு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

விட்டலர் ருக்மணி:
விட்டலர் ருக்மணி:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு நடுவில் நேற்று அட்சய திரிதியை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள இந்த கோவிலில் ருக்மணி அம்மனை சுமார் 7000 மாங்கனிகளை கொண்டு அலங்கரித்து சிறப்பு பூஜையை மேற்கொண்டனர்.அதற்கான வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. பின்பு இந்த கோவில் நிர்வாகம் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த வகையில் அம்மனை அலங்கரிப்பதற்காக பயன்படுத்திய 7000 மாம்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இந்த செயல் அனைவரிடத்தும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here