10 மாவட்டங்களில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அதிரடி!!

0
Lock
Lock

கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் செப்டம்பர் 28 வரை (7 நாட்கள்) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்திவாசிய தேவைகள் தவிர பிற அனைத்து செயல்பாடுகளுக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு:

சத்தீஸ்கரில் இதுவரை 86,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 677 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 37,853 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராய்ப்பூர் மாவட்டம் முழுவதுமே கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அம்மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ராய்ப்பூரைத் தவிர, ஜஷ்பூர், பலோடா பஜார், ஜஞ்ச்கீர்-சம்பா, துர்க், பிலாய், தம்தாரி, பிலாஸ்பூர், பிலாஸ்பூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் செப்டம்பர் 28 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நாட்களில் அனைத்து மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும், இருப்பினும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் எந்தவொரு பொதுக் கூட்டமோ அல்லது பேரணியோ அனுமதிக்கப்படாது.

செப்.23 அன்று 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

“மளிகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்படும். மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பால் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும், பின்னர் மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை திறந்திருக்கும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகள் அரசு வாகனங்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டு உள்ளது.

சுகாதாரம், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், துப்புரவு பணிகள் மற்றும் அவசர சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு வெளியே மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் ஆக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here