‘1.50 கோடி தடுப்பூசி கேட்டா 7.33 லட்ச தடுப்பூசி தான்’ – தமிழகத்திற்கு ஏற்பட்ட அவல நிலை!!

0

தமிழகத்தில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு போதிய இருப்பு இல்லை. இதன் காரணமாக கூடுதலாக தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்று முதல் அலை, இரண்டாம் அலை என பரவி மக்களுக்கு மிக பெரிய அளவில் பல இன்னல்களை விளைவித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் மீதான அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுமார் 4 மாத காலமாக பல தரப்பினருக்கு பல கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று(மே 1) முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் இன்று நாட்டில் 6 மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு வந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் மே 15ம் தேதி வரை கடைகளை அடைக்க தயார் – வணிகர்கள் சங்கம் அதிரடி!!

இந்நிலையில் தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க 1.50 தடுப்பூசியை அனுப்புமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தினர். தற்போது இதுகுறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2 வாரங்களில் தமிழகத்திற்கு 7.33 லட்ச தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 1.50 தடுப்பூசி கேட்ட தமிழகத்திற்கு 7.33 லட்ச தடுப்பூசிகளை மட்டுமே அனுப்ப உறுதியளித்துள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here