தனுஷ், விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
asuran

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கியவர்களுக்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள்

சிறந்த சினிமா படைப்புகளுக்கான 67ஆவது தேசிய விருதுகளின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் சிறந்து விளங்கிய ஒவ்வொரு துறைக்கும் விருதுகளுடன் ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் திரைப்படங்கள் ஒன்றும் இடம்பிடிக்காத நிலையில், இந்த ஆண்டு சிறந்த கேட்டகிரியில் பல தேசிய விருதுகளை அள்ளி குவித்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படம் தேசிய விருதில் இடம்பிடித்துள்ளது.

மாஸ் காட்டும் அம்பானி – மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகபடுத்த புதிய திட்டம்!!

சிறந்த நடிகருக்கான விருது ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுசுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக நடிகர் தனுஷ் ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருதை ‘விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‘சூப்பர் டீலஸ்’ படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ சிறந்த திரைப்படமாக ஜூரியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here