மெட்ரோ வில் ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா? அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!!

0
மெட்ரோ வில் ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா? அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!!
மெட்ரோ வில் ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா? அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!!

தற்போதைய அவசர உலகத்தில் அனைவருமே வேலைக்கு செல்வதற்கோ அல்லது தாங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்லவும் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயிலையே பயன்படுத்துகின்றனர். இந்த மெட்ரோ வசதி தற்போது மதுரையிலும் தொடங்க இருக்கும் நிலையில், கடந்த மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்., இந்த அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி?? அலைமோதும் கூட்டம்!!!

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 39,83,119 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 23,39,724 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4,136 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,56,489 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை பயன்படுத்தி 1,964 பயணிகள், மொத்தமாக 66,85,432 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும் அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,68,680 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here