Thursday, April 25, 2024

கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளிக்கும் சென்னை – வெள்ள அபாயத்தில் மக்கள்!!

Must Read

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தளவு நிலை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மட்டும் தலைநகர் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. 2 மணி நேரத்தில் 65 மீ.மி மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை:

வளிமண்டல சுழற்சி, பருவநிலை மாற்றம் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. வரும் 25 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் தினம்தோறும் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், நேற்று சென்னையில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த கனமழை இரவு வரை நீடித்தது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நேற்று மாலை பெய்த மழையின் அளவு மட்டும் 65 மீ.மி ஆகும். இது இந்த வருடத்திலேயே பெய்த அதிகபட்ச மழை அளவு ஆகும். சுமார் 2 மணி நேரத்தில் மட்டும் 7 செ.மீ மழை அதுவும் ஒரே நாளில் பெய்துள்ளது. கடத்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் இதே போன்று 50 மி.மீ மழை ஒரு நாளில் பதிவாகியது. இதன் காரணமாக தான் வெள்ளம் வந்தது.

அரசு நடவடிக்கை:

மீண்டும் இந்த ஆண்டு இப்படி பெய்துள்ளதால் வெள்ளம் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி புவியரசன் கூறுகையில்,”வங்க கடலில் உருவாகியுள்ள மாற்றம் தான் இதற்கு காரணம். இன்னும் வரும் 2 நாட்களுக்கும் கனமழை கண்டிப்பாக சென்னையின் பல பகுதிகளில் பெய்யக் கூடும்”

“சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். நேற்று பெய்த மழை சென்னையை மையமாக வைத்து தான் பெய்துள்ளது. இதன் காரணமாக தான் வெள்ளப் பெருக்கு மற்றும் கனமழை பெய்துள்ளது” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2015 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு ஒரே நாளில் இவ்வாறாக மழை பதிவாகியுள்ளது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பருவமழை துவங்காத நிலையிலேயே சென்னை இவ்வாறு தத்தளிக்கிறது, இனி வரும் பருவ மழையினை எப்படி எதிர்கொள்ளும் என்று அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். வடிகால் விவகாரத்தில் அரசு மற்றும் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -