கொரோனா பரவல் எதிரொலி – 60 மணி நேரம் பொதுமுடக்கம்! முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0

உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம்:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதில் தமிழகம், மராட்டியம், டெல்லி, உத்திர பிரதேசம் உட்பட சில மாநிலங்களில் தொற்று மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே நாட்டில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அந்த மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல் அங்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவலை குறைக்கும் வகையில் உத்தர பிரதேச முதல்வர் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மாநில அரசு அதிரடி!!

அதன்படி அவர் கூறியதாவது, மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட பாதிப்புகளை கொண்ட மாவட்டங்களில் அத்யாவசிய தேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் கிழமை காலை வரை 60 மணி நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். மேலும் மாநிலத்திற்கும் வரும் புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சனைகளால் மாநில எல்லைகளில் அதிகாரிகளை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here