இந்தியாவில் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு??ஐ.சி.எம்.ஆர் திடுக் அறிக்கை!!

0
lockdown
lockdown

இந்தியாவில் தற்போது 533க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதன் காரணமாக கண்டிப்பான முறையில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் சுமார் 2 மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருந்து ஆய்வு நிறுவனமான ஐ.சி.எம்.ஆர் தலைவர் இதுகுறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நடவடிக்கை அவசியம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா நோய்த்தொற்று தீவிரம் – 144 தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியர்!!

கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கண்டிப்பான முறையில் விதிக்கப்படவேண்டும். இந்தியாவில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. அதில் 553 மாவட்டங்களில் தற்போது 10% அதிகமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5% ஆக குறைந்தால் தளர்வுகள் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here