ராஜிவ் காந்தி வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சமீபத்தில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நளினி உள்ளிட்ட 6 பேருக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நிலையில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட சிலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இவர்களுக்கு தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக வழங்கப்பட்டது. மேலும் பேரறிவாளனுக்கு 30 ஆண்டு சிறைக்காலம், நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றம் விடுதலை அளித்திருந்தது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் (நளினியின் கணவர் முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார்) தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நளினி உள்ளிட்ட அந்த 6 பேருக்கு விடுதலை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளனை போலவே மற்ற 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதியானவர்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here