இந்தியாவில் கூடிய விரைவில் 5G? ரீசார்ஜ் பில் அதிகரிக்க வாய்ப்பு!

0
இந்தியாவில் கூடிய விரைவில் 5G? ரீசார்ஜ் பில் அதிகரிக்க வாய்ப்பு!
இந்தியாவில் கூடிய விரைவில் 5G? ரீசார்ஜ் பில் அதிகரிக்க வாய்ப்பு!

இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி அலைக்கற்றை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், 5ஜி அலைக்கற்றையின் காரணமாக மொபைல் ரீசார்ஜ் பில்லும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5ஜி சேவை:

நாடு முழுவதும் இணைய சேவையின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை தான் தொடங்கியது. பின்னர் நாளடைவில் 3ஜி, 4ஜி யைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பமும் தற்போது இந்தியாவில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது, 5ஜி தொழில்நுட்ப இணைய சேவையின் வேகத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி ஆகியவற்றின் வேகத்தையும் அதிகரிக்க இருக்கிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை ஏலத்தில் பெற விரும்பினர். அதாவது, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் துவங்கியது. கிட்டத்தட்ட 7 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் இறுதியாக 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றையை முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.

இதனால், மொபைல் ரீசார்ஜ் பில் கட்டணம் 4% வரைக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 30 சதவீத பிரீமியத்திலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவைகளை தொடங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் மிக விரைவாக 5ஜி அலைக்கற்றை அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், பாரம்பரிய உள்கட்டமைப்பு காரணமாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் 5ஜி அலைக்கற்றை கிடைக்க தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here