பிரபல மொபைல் நிறுவனத்தின் 5ஜி சோதனை ஓட்டம் – புதிய சாதனையை எட்டியதாக தகவல்!!

0

பிரபல ஐடியா மற்றும் வோடபோன் செல்போன் நிறுவனத்தின் Vi நிறுவனம் நடத்தப்பட்ட  5ஜி சோதனை ஓட்டத்தில் 3.7 ஜிகாபிட் என்ற வேகத்தை எட்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாதனை:

நாடு முழுவதும்  5ஜி இணைய வேகத்தை கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த 5ஜி சோதனை ஓட்டத்திற்கு கடந்த மே மாதத்தில் தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கியது.  இந்த சோதனையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், Vi உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரித்த கருவிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் நொடிக்கு 1 ஜிகாபிட் என்ற வேகத்தை எட்டியதாக முன்னணி நிறுவனங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தெரிவித்தன. இதையடுத்து, தற்போது  புனே நகரில் நடத்தப்பட்ட 5ஜி சோதனை ஓட்டத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் வினாடிக்கு 3.7 ஜிகாபிட் என்ற வேகத்தை எட்டியதாக தகவல் வந்துள்ளது.  நாட்டில் கண்டறியப்பட்ட  அதிவேக இணையத்தில் இதுவே முதல் இடத்தில் இருப்பது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here