அப்பாடா ஒரு வழியா வந்துருச்சி., சென்னை உட்பட 13 நகரங்களில் 5ஜி! பயனர்கள் குஷி!!

0
அப்பாடா ஒரு வழியா வந்துருச்சி., சென்னை உட்பட 13 நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் 5ஜி! பயனர்கள் குஷி!!
அப்பாடா ஒரு வழியா வந்துருச்சி., சென்னை உட்பட 13 நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் 5ஜி! பயனர்கள் குஷி!!

இந்தியாவில் மத்திய அரசு சென்னை, அகமதாபாத், டெல்லி, சண்டிகர், காந்திநகர் உள்ளிட்ட 13 நகரங்களில் முதல் கட்டமாக 5g சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அரசு அறிவிப்பு:

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் இணைய சேவை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த இணைய சேவைக்கான தேவை, பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, தற்போது வரை 4g அலைக்கற்றை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த 4ஜி தற்போதைய தொழில்நுட்பத்திற்கு போதுமானதாக இல்லை என, இதன் பயனர்கள் கோரிக்கை வைத்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், 5g அலைக்கற்றையை களம் இறக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அதன் பயனாக, தற்போது 5g அலைக்கற்றை குறித்த சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான ஏலம் ஆன்லைன் தளத்தில், அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

அதன்படி முதல் கட்டமாக சென்னை, அகமதாபாத், காந்திநகர், டெல்லி, சண்டிகர், பெங்களூர், குரு கிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் இந்த 5ஜி இணைய சேவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால், இதை பயன்படுத்த ஆவலாக உள்ள பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here