இந்தியாவில் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் 5ஜி சேவை – குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்! குஷியில் பயனர்கள்!!

0
இந்தியாவில் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் 5ஜி சேவை - குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்! குஷியில் பயனர்கள்!!
இந்தியாவில் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் 5ஜி சேவை - குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்! குஷியில் பயனர்கள்!!

இந்தியாவில் 5G இணைய சேவைக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற செப்டம்பர் முதல் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு :

இந்தியாவில், பயனர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 5ஜி இணைய சேவை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான சோதனையத்தை கடந்த மே 19ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை ஐஐடி யில் தொடங்கி வைத்தார். தற்போது, இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 5ஜி அலைவரிசையை தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ஸ்மார்ட் போன் வாயிலாக சோதனை செய்து பார்த்தார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 5ஜி சேவை, செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 நகரங்களில் தொடங்கப்படும் இந்த 5ஜி சேவை, அதன் பிறகு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த 5ஜி சேவை வாயிலாக, 1.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், உறுதி அளித்துள்ளார். இதனால், பயனர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here