கரூரில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு.,, முதல்வர் தொடங்கி வைப்பு.., மட்டற்ற மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

0
கரூரில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு.,, முதல்வர் தொடங்கி வைப்பு.., மட்டற்ற மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
கரூரில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு.,, முதல்வர் தொடங்கி வைப்பு.., மட்டற்ற மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக இன்று (நவ.,11) 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்:

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு சென்று உள்ள முதல்வர், இன்று 50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் இன்று (நவ.,11)காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி அருகே தடா கோவிலில் உள்ள களத்தில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

அரசு பணி நியமனங்கள்.,, புதுச்சேரி அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

அதாவது மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள், முதல் முறையாக கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு திட்டத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 2வது முறையாக 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20,000 விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்புக்கான ஆர்டர் வழங்கப்பட உள்ளது. மேலும் மற்ற மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here