5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு கட்டாயம்.. அதை பெறுவது எப்படி – விவரங்கள் உள்ளே!

0

மத்திய அரசு வழங்க கூடிய  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு பெறுவதில் சந்தேகமா? அதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது.

பால் ஆதார் கார்டு:

பிறந்த குழந்தை முதல் அனைத்து சாதாரண மனிதர்களுக்கும் ஆதார் கார்டு என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டின் பெயர் பால் ஆதார் கார்டு அல்லது நீல நிற ஆதார் அட்டை எனப்படும்.

இதை பெறுவதற்கான வழிகள் பின்வருமாறு..

  • இந்த ஆதார் அட்டையை பெறுவதற்கு உங்கள் குழந்தையுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு  செல்லவும்.
  • செல்லும் போது உடன், குழந்தையின் பிறந்த சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்து செல்லவும்.
  • அங்கு சென்றவுடன் நீல நிற ஆதார் அட்டைக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று நிரப்பவும்.

  • அதைப் பெறுவதற்கு, பெற்றோரான உங்கள் ஆதார் அட்டை தேவைப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
  • அதன்பிறகு நீல நிற ஆதார் அட்டைக்கான தொலைபேசி எண் கேட்கப்படும்.
  • இந்த ஆட்டைக்கு பயோமெட்ரிக் தேவையில்லை என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.
  • அதன்பிறகு ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்த பிறகு 60 நாட்களுக்குள் குழந்தைக்கு ஆதார் கார்டு கிடைத்துவிடும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here