Thursday, April 18, 2024

5 நிமிடங்களில் 50 % சார்ஜ்!! குவல்காம்மின் குயிக் சார்ஜ் 5

Must Read

சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான குவல்காம், குயிக் சார்ஜ் 4+ – ஐ வெளியிட்ட நிலையில் தற்போது அதனை விட நவீனமான குயிக் சார்ஜ் 5 என்ற தொழில் நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

15 நிமிடங்களில் முழு பேட்டரி

பல கைபேசி நிறுவனங்கள் தற்போது தனக்கு சொந்தமாகவே விரைவில் சார்ஜ் செய்யக்கூடிய தொழில் நுட்பத்தை வைத்துள்ளது. இதில் ஒப்போ மற்றும் ஒன் பிளஸ் போன்ற நிறுவங்களும் அடங்கும்.

இதை தொடர்ந்து குவல்காம் வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி unpacked 2020 டீஸர்!! நிறுவனம் 5 கும் குறைவான நிமிடங்களில் பேட்டரியின் சார்ஜ் 0 வில் இருந்து 50 சதவீதம் வரை கொண்டு வரும் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளது.

இது 4500 mAh திறன் கொண்ட பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

இதில் பேட்டரி சேவர் , தகுதியான அடாப்டர்களை தேர்தெடுக்கும் யுத்தி, கூலர் வசதி, 2S பேட்டரி வசதி, டூயல் சார்ஜ் வசதி என வாடிக்கையாளரை கவரும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது 100W + வகை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. மேலும் இது குயிக் சார்ஜ் 1 ஐ விட 10 மடங்கு அதிகம் நவீன நுட்பம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் நேரம் குறையும்:

தற்காலத்தில் நாம் மிகவும் மின் சாதனங்கள் குறிப்பாக மொபைல் ஹெட் செட் போன்றவற்றை சார்ந்து உள்ளோம். அதனால் அதன் பேட்டரி மற்றும் சார்ஜ் செய்யப்படும் முறைகளில் மக்கள் அதிகம் கவனம் செய்கிறார்கள். இந்நிலையில், இவ்வாறு விரைவில் சார்ஜ் செய்யும் கண்டுபிடிப்புகள் மக்களின் நேரத்தை மிகவும் மிச்சம் செய்யும். மேலும், உலகின் முதல் வர்த்தக 100W க்கு விரைவாக சார்ஜ் செய்யும் கருவியாக குயிக் சார்ஜ் 5 இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -