ஒரு நாளைக்கு 40,000 கொரோனா தடுப்பூசி வழங்க திட்டம் – மாநில அரசு அதிரடி!!

0

நாட்டில் அனைத்து மாநிலத்திலும் தடுப்பூசி பணிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 40,000 தடுப்பூசி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இரண்டு டோஸாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி முறையாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக மருந்து நிறுவனங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி தகவல் குறித்து பிபிஎம் உயர் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தடுப்பூசி இருப்பை கணக்கில் கொண்டு தற்போது நாள் ஒன்றுக்கு 40000 தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கிராமப்புறங்களில் 40% தாண்டும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

அங்குள்ள 198 வார்டுகளில் 40,000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. அதாவது ஒரு வார்டுக்கு 200 தடுப்பூசியை நாள் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் முக்கியத்துவம் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here