இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! – 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! - 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! - 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! – 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 புதிய # COVID19 வழக்குகள் பதிவாகியுள்ளது எனவும் , 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மற்றும் 4,000 இறப்புகள் பதிவு ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் தீ வேகத்தில் பரவுகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று பரவல் குறைந்த பாடில்லை. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும் இறப்பு எண்ணிக்கை 4000 ஐ தொட்டு கொண்டுள்ளது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. அங்கே இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்ட DM களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை மே 18, 20 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் :
  • இதுவரை பதிவான மொத்த வழக்குகள்: 2,40,46,809
  • இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் : 2,00,79,599
  • இதுவரையில் மொத்த இறப்பு எண்ணிக்கை: 2,62,317
  • தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் : 37,04,893
  • இதுவரை மொத்தமாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் : 17,92,98,584

தடுப்பூசி ஒன்றே பரவலை கட்டுப்படுத்த தீர்வாகியுள்ள நிலையில் , தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் ஒரே வழியாகும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here