ஆதார் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.4.78 லட்சம் கடன் உதவி? மத்திய அரசின் அதிரடி விளக்கம்!!

0
ஆதார் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.4.78 லட்சம் கடன் உதவி? மத்திய அரசின் அதிரடி விளக்கம்!!
ஆதார் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ரூ.4.78 லட்சம் கடன் உதவி? மத்திய அரசின் அதிரடி விளக்கம்!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மத்திய அரசு கடன் வழங்குவதாக வெளியான தகவல் உண்மையில்லை என பிஐபி அறிவித்துள்ளது.

மத்திய அரசு

இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு கூட உடனடியாக ஆதார் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும் வற்புறுத்தி வருகின்றனர். இந்த ஆதார் மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். ஆனாலும் இதை வைத்து சிலர் மோசடி வேலைகளிலும், பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் அண்மையில் கூட ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்தது. இது குறித்து, மோடி புகைப்படத்தையும், ஆதார் அட்டையையும் இணைத்து இணையத்தில் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர். இதனை சிலர் உண்மை என்றும் நினைத்துக் கொண்டுதான் இருந்தனர். இந்நிலையில் இந்த விஷயம் உண்மை அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம் – இலவச முட்டை, பிஸ்கட் வழங்க முடிவு.,ஸ்டாலின் உத்தரவு!!

மேலும் சமீப காலமாக சிலர் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் பணம் பறிப்பதற்காக பல திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக தான் இது போன்ற வதந்தியையும் இப்போது பரப்பியுள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here