4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  – ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!

0
4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  - ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!
4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  - ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!

ரயில்வே நிர்வாகத்தின் 4 மணி நேர தாமதத்தால், பயணி ஒருவருக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு ரயில்வே துறைக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வேக்கு அபராதம்:

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் சுக்லா என்ற நபர் தனது குடும்பத்துடன் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்ல மதியம் 12 மணி விமானத்தில் பதிவு செய்திருக்கிறார்.  இதற்காக, அஜ்மீர்- ஜம்மு எக்ஸ்பிரஸ் ரயிலில் சஞ்சய் சுக்லா குடும்பத்துடன் பயணித்தார்.  இந்த நிலையில்,  காலை 8.10 மணி ரயிலில் பதிவு செய்திருக்கிறார்.   ஆனால் காலை 8.10 மணிக்கு வரவேண்டிய ரயில் கிட்டத்தட்ட 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு மதியம் 12 மணியளவில்  ஜம்மு வந்தடைந்து இருக்கிறது.

4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  - ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!
4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  – ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!

இதனால், இவரது குடும்பம் விமானத்தை தவறவிட்டு, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல டாக்சிக்கு ரூ.15 ஆயிரமும், ஸ்ரீநகரில் தங்கியதற்கு ரூ.10 ஆயிரமும் செலவிட்டிருக்கிறார்.  இதனை அடுத்து ரயில்வேயின் இந்த நேர பின்பற்றாமை காரணமாக  மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு ரயில்வே துறைக்கு தலா 30,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டது.

4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  - ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!
4 மணி நேர தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட பயணி  – ரயில்வேக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!

இதனை எதிர்த்து, ரயில்வே துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரயில் தாமதமாக இயக்கப்படுவதற்கு யாராவது பொறுப்பேற்று ஆக வேண்டும் என தெரிவித்தனர்.   மேலும், பயணிகளின் நேரம் பொன்னானது என்றும், அதிகாரிகள் கருணையை எதிர்பார்த்து பயணிகள் காத்திருக்க முடியாது என்றும் கூறி நிர்வாகம் தகுந்த காரணத்தை தெரிவிக்காவிடில் நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரயில்வே நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here