தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது மிக கனமழை காரணமாக ஏற்படும் மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக ஊழியர்கள் சரி செய்ய வேண்டும். அதற்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக ரூபாய் 4.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இத்துடன் ஏதேனும் ஒரு பகுதியில் மின் விநியோகம் பாதிப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் அதை உடனடியாக மக்கள் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.