இந்தியா vs ஆஸ்திரேலியா.., எதிர் அணியை வியந்து பார்க்க வைத்த இந்திய வீரர்!!!

0
இந்தியா vs ஆஸ்திரேலியா.., எதிர் அணியை வியந்து பார்க்க வைத்த இந்திய வீரர்!!!
இந்தியா vs ஆஸ்திரேலியா.., எதிர் அணியை வியந்து பார்க்க வைத்த இந்திய வீரர்!!!

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 3வது ஹாக்கி போட்டியில் கடைசி திக் திக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சிதறடித்த இந்திய அணி வீரர் அசத்தியுள்ளார்.

ஹாக்கி போட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் பங்கேற்று வருகிறது. அதன் படி நடந்து முடிந்த இரண்டு ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த 3 வது ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்யும் கட்டாயத்தில் இந்திய அணி விளையாடியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன் படி வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் கேப்டன் ஹர்மன்பிரீத் 12வது நிமிடத்திலும், அபிஷேக் 47வது நிமிடத்திலும், ஷ்யாம் சென்சிங் 57வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 25வது நிமிடத்தில் ஜாக் வெல்ச், 32 வது நிமிடத்தில் கேப்டன் அரேன் ஜெலன்ஸ்கி, 59வது நிமிடத்தில் நாதன் ஹெபிராம்ஸ் கோல் அடித்தனர்.

உலக கோப்பை நேரத்தில் கால்பந்து ஜாம்பவானுக்கு வந்த சோதனை.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இப்படி சமநிலையில் சென்று கொண்டிருந்த ஆட்டம் கடைசி 60 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஆகாஷ்தீப் சிங் அதிரடியாக கோல் அடித்ததால் இந்திய அணி 4-3 என்ற வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து டிசம்பர் 3 ல் நடக்க உள்ள 4 வது ஆட்டத்திலும் 5 வது ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here