உலகின் முதல் 3D Printed இரும்பு நடை பாலம்…!அசத்தும் நெதர்லாந்து நிறுவனம்!!!

0

உலகில் பல விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை உலகை ஒரு படி முன்னேற்றி செல்கின்றன. அந்த வகையில் தற்போது முப்பரிமாணம் எனப்படும் 3D Printed இரும்பு பாலத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D நிறுவனம் வடிவமைத்து  அசத்தி உள்ளது. மேலும் இது உலகின் முதல் 3D Printed நடைபாலம் ஆகும்.

இந்த காலகட்டத்தில் அறிவியல் தொழில் நுட்பங்கள்  நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. இந்நிலையில் சமீப காலங்களாக 3D பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வித பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. அதாவது மருத்துவ துறை, கல்வி துறை போன்ற பல துறைகளில் அதன் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. மேலும் தற்சமயம் இந்த வடிவமைப்பை பற்றி படிக்க தனியாக பல படிப்புகளும் வந்து உள்ளன. மேலும் அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

அந்த வகையில் தற்போது நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D என்ற தனியார் நிறுவனம் முதன் முறையாக 3D Printed நடைபாலம் வடிவமைத்து உள்ளது. மேலும் இந்த இரும்பு நடைபாலத்தை நெதர்லாந்து தலைநகரில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள குயின் மெக்ஸிமாவில் அமைத்து உள்ளனர். இந்த பிரம்மாண்ட நடைபாலம் நான்கு வருட விட முயற்சிக்கு பின்னர் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 3D Printed நடைப் பாலத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here