தொடரும் பதக்க வேட்டை.., தமிழக வீரர்களின் மிரட்டலான ஆட்டம்.., நெருங்குவதற்கு பயப்படும் சக வீரர்கள்!!

0
தொடரும் பதக்க வேட்டை.., தமிழக வீரர்களின் மிரட்டலான ஆட்டம்.., நெருங்குவதற்கு பயப்படும் சக வீரர்கள்!!
தொடரும் பதக்க வேட்டை.., தமிழக வீரர்களின் மிரட்டலான ஆட்டம்.., நெருங்குவதற்கு பயப்படும் சக வீரர்கள்!!

தேசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தங்க பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

பவானி தேவி

36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்படி இன்று நடைபெற்ற வாள்வீச்சு மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரை தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீராங்கனை இளவேனில் 16-10 என்ற புள்ளிக் கணக்கில் கர்நாடக வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இன்னைக்கு இத பண்ணுங்க ரோஹித்.., அப்போதா வெற்றி பெற முடியும்.., ஓ இது தான் அந்த ரகசியமா??

இதே போன்று நடைபெற்ற மற்றொரு மகளிருக்கான போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் தங்கப்பதக்கத்தையும் வென்றார். இந்த தேசிய போட்டியில் தமிழக வீரர் களை சமாளிக்க முடியாமல் மற்ற வீரர்கள் திணறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here