தமிழகத்தில் வேகமெடுக்கும் 3 வகையான காய்ச்சல்கள் …, நிரம்பும் மருத்துவமனை வார்டுகள்!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் 3 வகையான காய்ச்சல்கள் ..., நிரம்பும் மருத்துவமனை வார்டுகள்!!

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து டெங்கு காய்ச்சலும், கொரோனாவும் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிரம்பும் வார்டுகள்:

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து , பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தலைத்தூக்கி உள்ளது. இது மக்களிடையே ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக ‘H1 N1 இன்ப்ளூயன்சா வைரஸ்’ வகையை சேர்ந்த பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர். அதாவது காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என கூறுகின்றன.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சென்னையில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. மற்றொரு பக்கம் கொரோனா தினசரி பாதிப்பு 500-ஐ தொட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 121 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால் வார்டுகள் நிரம்பி வருகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் பருவகால நோய்கள் – அரசு எடுத்த அதிரடி முடிவு! வரவேற்பு அளித்த பொதுமக்கள்!!

Disease vector mosquito known for dengue, yellow fever and zika virus

இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதாரதுறை தீவிர நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 8 கோடி பேரில், 1% என்ற அளவில் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதனால் மக்கள் யாரும் பயம் அடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here