Friday, March 29, 2024

உத்தரகாண்டில் மேக வெடிப்பால் 3 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்..!!

Must Read

உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள மட்கோட் பகுதியில் மேகம் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மாவட்ட நீதவான் பித்தோராகர் வி.கே.ஜோக்தாண்டே தெரிவித்து உள்ளார்.

பலத்த மழை:

கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுக்கு அடங்காத மழை பெய்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில், முன்சியாரி, டார்கோட், மேட்கோட் கிராமத்தை பித்தோராகர் வரை இணைக்கும் சாலை பலத்த மழை காரணமாக சேதத்திற்கு உள்ளானது. கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதால் பல இடங்களில் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

utharakhand cloud burst
utharakhand cloud burst

கல்நாலா, பானர்பானி மற்றும் தொட்டகட்டி ஆகிய இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டன.

மேக வெடிப்பு:

இதனை தொடர்ந்து, திடீரென மேகங்கள் ஒன்று கூடி மேக வெடிப்பாக காணப்பட்டது. மேக வெடிப்பு மட்கோட் கிராமத்தில் நிகழ்ந்து உள்ளது. இதில் 3 பேர் அந்த இடத்திலேயே இறந்து உள்ளனர்.

cloudburst
cloudburst

மேலும் 8 பேர் காணவில்லை என்று கிராம மக்களால் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களின் உடல்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு உள்ளது. காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் மற்றும் கிராமத்தினர் தேடி வருகின்றனர்.

கோவில்களில் திருவிழாக்களை நடத்தலாம் – இந்து சமய அறநிலையத்துறை அனுமதி!!

மாவட்ட நீதவான் பித்தோராகர் வி.கே.ஜோக்தாண்டே கூறுகையில் ” 3 பேர் இறந்து உள்ளனர் மற்றும் 8 பேர் காணாமல் போயுள்ளனர், அவர்களை தேடி மீட்டு பணியினர் சென்று உள்ளனர். போக்குவரத்துக்கு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -