ஏ.டி.எம் தீப்பற்றிய விவகாரம் – 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்!!

0

நாமக்கல் அருகே ஏ.டி.எம் வழக்கில் ஹரியானவை சேர்ந்த சகோததர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ.டி.எம் தீப்பற்றிய விவகாரம்..!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள பாச்சல் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் யூனியன் வங்கி ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏ.டி.எம் மையத்தில் கடந்த 5ம் தேதி அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிலிருந்த 2லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் புகார் கொடுத்ததின் பேரில் புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதையடுத்து ஏ.டி.எம் மையம் நெடுசாலையில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் கிடைத்த காட்சிகளை கொண்டு விசாரணை செய்தனர். இதில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏ.டி.எம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்துடன் உள்ளே சென்று கொண்டுவிட்டு வெளியில் வரும்போது ஏ.டி.எம் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதுசத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது டாரஸ் லாரியை நிறுத்தியபோது அதிலிருந்து 3 பேர் தப்பி ஒட்டியுள்ளனர்.

இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்கள் எதிரொலி – ஆயுத கட்டமைப்பில் பாகிஸ்தான்!!

அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் 3பேரும் ஹரியானா மாநிலம் பலவால் மாவட்டத்தை சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜீனித் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த 5ம் தேதி ஹரியானாவில் இருந்து மதுரைக்கு சரக்குகளை இறக்கிவிட்டு ஆந்திராவை நோக்கி சென்றுள்ளது. அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட்டது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்து புதுசத்திரம் போலீசார் கொள்ளைக்கு பயன்படுத்திய லாரி மற்றும் வெல்டிங் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட சைகுல் மற்றும் முகமது சராபத் இருவரும் சகோததர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here