தன் குழந்தையையே சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய தாய் – சிறைத்தண்டனை அளித்த நீதிமன்றம்!!

0
தன் குழந்தையையே சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய தாய் - சிறைத்தண்டனை அளித்த நீதிமன்றம்!!
தன் குழந்தையையே சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய தாய் - சிறைத்தண்டனை அளித்த நீதிமன்றம்!!

தனது இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தாயை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைக்கு நேர்ந்த துன்பம் :

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன் (வயது 26) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த துளசி (வயது 23) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடும் , வார்த்தை மோதலும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மோதல் போக்கு காரணமாக, துளசி தனது கணவன் வடிவழகனை பிரிந்து தனது தாய் வீடான ஆந்திராவிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், தனது இரண்டு வயது குழந்தையையும் தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார்.

குழந்தைக்கு நேர்ந்த துன்பம் :
குழந்தைக்கு நேர்ந்த துன்பம் :

இதில் சில நாட்களுக்கு முன் துளசி ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கான காரணம், குறித்து துளசி தெரிவித்தது காவல்துறையை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்வடையச் செய்துள்ளது. அவர் தெரிவித்ததாவது, தனக்கு இருந்த தவறான பழக்கத்தால் பிறந்த குழந்தை தான் அது என்றும், அது குழந்தையின் தந்தையை போல் இருப்பதால் அதை துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, வடிவழகன் கொடுத்த புகாரில் துளசியை கைது செய்து தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த கொடூர தாயை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், அந்த தாய் தனது இரண்டு வயது குழந்தையை முடியை பிடித்து அடிப்பதும், கால்களை மடக்கி, வளைத்து சித்திரவதை செய்வதும் வீடியோவாக பரவி மக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here