கொரோனாவிற்கு எதிரான 2டிஜி தடுப்பு மருந்து – பயன்பாட்டிற்கு எப்போது??

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும் வகையில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள 2டிஜி தடுப்பு மருந்து எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

2 டிஜி தடுப்பு மருந்து:

நாட்டில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும் வகையில் தற்போது மக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக புதிய தடுப்பு மருந்து ஒன்றிற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மிதமான பாதிப்பு முதல் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மருந்தினை நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டி.ஆர்.டி.ஓ., தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, ‘டாக்டர் ரெட்டிஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த மருந்து 2டிஜி அல்லது ‘2 டி ஆக்சி டி குளுக்கோஸ்’ என்று அழைக்கப்படும். இந்த மருந்து பொடி வடிவில் அமைந்திருக்கும் என்றும் இதனை தண்ணீரில் கலந்து உண்ண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அரசி அட்டை தாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் இன்று துவக்கி வைப்பு!!

இந்த மருந்து வைரஸ் பரவலை தடுக்கும் என்றும் வேகமாக குணமடைய செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மருந்து ஆக்சிஜன் தேவையை குறைக்கும் என்றும் இதனால் நாட்டில் உயிரிழப்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்து இன்னும் சில வாரங்களில் அல்லது 1 மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அதற்கான பணிகள் முழு வீச்சில் இருப்பதாகவும் டி.ஆர்.டி.ஓ இயக்குனர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here