2,000 ரூபாய் புதிய நோட்டுகள் அச்சடிக்கவில்லை – RBI தகவல்!!!

0

2019ம் ஆண்டை போலவே இந்த 2020 – 2021 நிதியாண்டிலும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

2,000 ரூபாய் புதிய நோட்டுகள் அச்சடிக்கவில்லை:

இந்த கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி நேற்று ஒரு தகவலை வெளியிட்டது; அதில் 2020 – 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை; அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

ஏனெனில் இதுவரை கணக்கெடுத்த மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில்; மார்ச் 31, 2021 வரை புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளின் மதிப்பில் 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 85.7 சதவீதமாக இருந்தது; முன்னதாக இது மார்ச் 31, 2020 நிலவரப்படி 83.4 சதவீதமாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் 2017-18ல் இந்திய பொருளாதாரத்தில் ரூ .2,000 நோட்டுகளின் எண்ணிக்கை 33,630 லட்சமாக உச்சத்தை எட்டியது; ஆனால் தற்போது  2021 மார்ச் மாதத்தில் அது 24,510 லட்சமாக குறைந்துள்ளது. அந்த வகையில்  ரூ .2,000 நோட்டுகளின் மதிப்பு ரூ .6.72 லட்சம் கோடியாக இருந்தது, இது இப்போது ரூ .4.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

மேலும் கொரோனா காலத்தில்; மக்கள் அவர்களிடம் இருக்கும் பணத்தையும் பாதுகாக்க ஆரம்பித்து விட்டனர். இதனாலும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்தது. புழக்கத்தில் உள்ள 500 நோட்டு எண்ணிக்கை 3,867.9 கோடி. மதிப்பு அடிப்படையில், இது 19.34 லட்சம் கோடியாக உள்ளது. கொரோனா 2ஆம் அலை பெரும் பாதிப்பை பொருளாதாரத்தில் ஏற்படுத்தவில்லை; எனினும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here