சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வசிக்கும் மக்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் இப்போது வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி வரும் 8,9 ஆம் தேதி திருச்சி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கும்பகோணம் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.