இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.,,ஒரே நாளில் 22 பேர் பலி., அதிர்ச்சி அறிக்கை!!

0
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.,,ஒரே நாளில் 22 பேர் பலி., அதிர்ச்சி அறிக்கை!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது.

கொரோனா நிலவரம்:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் தொற்றால் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 2,17,96,31,500 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று 13,87,533 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறப்பு விகிதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் 3,615 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,79,088 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து புதிதாக 22 பேர் தொற்றால் பலியாகி உள்ளதால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு H1N1 வைரஸ் தொற்று உறுதி – மருத்துவர்கள் பகீர் அறிக்கை!!

மேலும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,09,525 ஆக உயர்ந்து உள்ளதாகவும் , கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44,436 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.72% ஆக உயர்ந்து உள்ளதாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here