அதிரடியாக குறைந்த தங்க விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0

தமிழகத்தில் தங்க விலை மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி வருகின்றது. கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் அனைவரும் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயர்ந்து வரும் தங்க விலை:

கடந்த ஒரு வாரமாகவே தங்க விலை அதிகபட்ச விலையினை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்க விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று சவரனுக்கு 100 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது.

இன்றைய தங்க விலை:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து ரூ.37,976 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 22 ரூபாய் குறைந்து ரூ.4, 747 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் ரூ.5,131 என்றும் ஒரு சவரன் ரூ.41,048 என்றும் விற்பனையாகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold and silver rate
gold and silver rate

முதன்முதலாக அண்ணன், அண்ணி மீது கோபப்படும் ஜீவா!!

வெள்ளி விலையும் இன்று சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60 என்ற விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73, 600 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here